முக்கோணத்தின் சமனின்மைப்பண்பு
ஒரு முக்கோணம் என்பது மூன்று கோட்டுத்துண்டுகளால் அடைபடும் மூடிய வடிவம் என்பது நாம் அறிந்ததே.
அந்த மூன்று கோட்டுத்துண்டுகளும் அளவுகளைக் கொண்டுள்ளன.அந்த அளவுகளை குறிக்கும் தனிப்பண்பு முக்கோணத்தின் சமனின்மைப்பண்பு எனப்படும்.
சமனின்மைப்பண்பு :
ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவை விட அதிகமாகும்.
எடுத்துக்காட்டு:
23 செ.மீ,17 செ.மீ மற்றும் 8 செ.மீ ஆகியவை முக்கோணத்தின் பக்கங்களா என ஆராய்க.
தீர்வு:
23+17 = 40 > 8
17+8 =25 > 23
23+8 = 31 >17
தரப்பட்ட அளவுகள் முக்கோணத்தை அமைக்கும்.
எனவே முக்கோணத்தை சரியாக அமைப்பதற்கு சமனின்மைப்பண்பு உதவுகிறது.
Comments
Post a Comment