சாய்சதுரம் அமைத்தல்



         அடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள ஓர் இணைகரம் சாய்சதுரம் ஆகும்.

                

சாய்சதுரத்தின் பண்புகள்:
  • அனைத்து பக்கங்களும் சமம்.
  • எதிர்க் கோண அளவுகள் சமம்
  • மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இருசமக் கூறிடுகின்றன.
  • எவையேனும் இரு அடுத்துள்ள கோண அளவுகளின் கூடுதல் 180° ஆகும்.
  • ஒவ்வொரு மூலைவிட்டமும் சாய்சதுரத்தை இரண்டு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கின்றன.
  • மூலைவிட்டங்கள் அளவில் சமமற்றவை.
சாய்சதுரத்தின் பரப்பளவு:
      சாய்சதுரத்தின் பரப்பு , A = 1/2 × d₁ × d₂ சதுர அலகுகள்.

        சாய்சதுரத்தின் பண்புகளை பயன்படுத்தி தரப்பட்ட  அளவுகளை கொண்டு சாய்சதுரம் வரைந்து பரப்பளவு சூத்திரம் மூலம் வரையப்பட்ட சாய்சதுரத்தின் பரப்பளவை கணக்கிடலாம்.
             

Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

அரை வட்டம்