காரணிப்படுத்தும் முறைகள்
ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவைகளும் அவற்றின் தன்மைக்கேற்ப வெவ்வேறு முறைகளில்
காரணிப்படுத்தப் படுகின்றன.இந்த முறைகளையே காரணிப்படுத்தும் முறைகள் என்கிறோம்.
காரணிப்படுத்தலின் முறைகள்:
- பொதுக்காரணியை வெளியே எடுத்துக் காரணிப்படுத்தல்
- உறுப்புகளைத் தொகுத்து காரணிப்படுத்தல்
- முற்றொருமைகளை பயன்படுத்தி காரணிப்படுத்தல்
(x+a)(x+b) என்ற முற்றொருமையை பயன்படுத்தி பின்வரும் பல்லுறுப்புக் கோவையை காரணிப்படுத்துக:
x²+5x+6
தீர்வு:
x²+5x+6 ஐ x²+(a+b)x+ab உடன் ஒப்பிட,
ab = 6 , a+b = 5 ,x=x என கிடைக்கிறது. x²+5x+6 = x²+(2+3)x+(2×3)
x²+5x+6 = (x+2)(x+3)
ஃ x²+5x+6 இன் காரணிகள் (x+2) ,(x+3) ஆகியவை ஆகும்.
Comments
Post a Comment