இயற்கணிதக் கோவைகளின் வகுத்தல்

         
             சாதாரணமாக எண்களின் வகுத்தலைப் போன்றே இயற்கணிதக் கோவைகளின் வகுத்தலும்  அமையும் . இதில் கூடுதலாக aᵐ/aⁿ = aᵐ-ⁿ  என்ற அடுக்கு விதி பயன்படுத்தப் படுகிறது.

  • ஓர் ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் வகுத்தல்
  • ஒரு பல்லுறுப்புக் கோவையை ஓர் ஓருறுப்புக் கோவையால் வகுத்தல்
ஆகிய இரண்டு முறை வகுத்தல் பற்றி இப்பகுதியில் காண்போம்.

எ.கா:
சுருக்குக:
         (1)  10x⁵ ÷ 2x²
         (2)  (8x³ - 5x² + 6x) ÷ (2x)
தீர்வு:
(1)  10x⁵ ÷ 2x² = 10x⁵ / 2x²
                          = (2×5×x×x×x×x×x) / (2×x×x)
                          = 5×x×x×x
                          = 5x³
(2)  (8x³ - 5x² + 6x) ÷ (2x)
             = (8x³/2x) - (5x²/2x) + (6x/2x)
             = 4x² - (5/2)x +3
       
          இதே முறையை பயன்படுத்தி ஒரு பல்லுறுப்புக் கோவையை மற்றொரு பல்லுறுப்புக் கோவையால் வகுத்தலையும் செய்து ஈவினை கண்டறியலாம்.

Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்