நேர்க்கோட்டு வரைபடங்கள்
நேரம் மற்றும் காலத்திற்கு இடையேயான தொடர்பு ,பக்கம் மற்றும் பரப்பளவிற்கு இடையேயான தொடர்பு மற்றும் ஒரு எண்ணிற்கும் அதன் மடங்கிற்கும் இடையேயான தொடர்பு ஆகியவற்றை குறிக்கும் வரைபடங்களே நேர்க்கோட்டு வரைபடங்கள் ஆகும்.
நேர்க்கோட்டு வரைபடம்:
ஒரு வரைபடத்தாளில் ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைப்பதன் மூலம் ஒரு நேர்க்கோடு கிடைக்கிறது, எனில் அந்த வரைபடத்தை நேர்க்கோட்டு வரைபடம் என்கிறோம்.
எ.கா:
ஒரு சதுரத்தின் சுற்றளவுக்கும் பக்கத்திற்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டும் நேர்க்கோட்டு வரைபடத்தை வரைக.
தீர்வு:
ஒரு சதுரத்தின் சுற்றளவு என்பது அதன் பக்கத்தைப் போன்று நான்கு மடங்கு ஆகும்.
அதாவது , P = 4a
புள்ளிகள் :(0,0) , (1,4) , (2,8) , (3,12) , (4,16)
Comments
Post a Comment