சதுரம் அமைத்தல்
அடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள செவ்வகம் சதுரம் ஆகும்.

சதுரத்தின் பண்புகள்:
- எல்லாக் கோண அளவுகளும் சமம்.
- எல்லாப் பக்க அளவுகளும் சமம்.
- ஒவ்வொரு கோணமும் செங்கோணம்.
- மூலைவிட்டங்கள் சம அளவுடையன.
- மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று செங்கோணத்தில் இருசமக் கூறிடுகின்றன.
பரப்பளவு = பக்கம் × பக்கம்
A = a × a சதுர அலகுகள்.
ஒரு பக்க அளவு அல்லது ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருந்தால் பொருத்தமான வடிவியல் உபகரணங்களை பயன்படுத்தி சதுரம் வரைந்து பரப்பளவு சூத்திரம் மூலம் பரப்பளவு கணக்கிட இயலும்.