சர்வசம முக்கோணங்கள்
ஏதேனும் இரு பொருள்கள் அளவிலும் வடிவத்திலும் ஒத்ததாக இருப்பின் அவை சர்வசம தன்மை உடையவை ஆகும்.பின்வரும் படங்களைக் கருதுவோம்



படங்களில் உள்ள இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு இலைகளும் அளவிலும் ஒத்துள்ளன.
எனவே இவை சர்வசமம் ஆகும்.
அதாவது, இரு தள உருவங்கள் ஒன்றின் மீது ஒன்று சரியாகப் பொருந்தினால் அவை சர்வசமம் எனப்படும். இதை ' ≡ ' என்ற குறியீட்டின் மூலம் குறிக்கலாம்.
இரு முக்கோணங்களில் ஏதேனும் ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் மூன்று கோணங்களும் முறையே மற்றொன்றின் மூன்று பக்கங்களுக்கும் மூன்று கோணங்களுக்கும் சமம் எனில் அவை சர்வசம முக்கோணங்கள் எனப்படும்.
முக்கோணங்களின் சர்வசம தன்மைக்கான அடிப்படைக் கொள்கைகள்:
1) ப-ப-ப அடிப்படை கொள்கை
2) ப-கோ-ப அடிப்படை கொள்கை
3) கோ-ப-கோ அடிப்படை கொள்கை
4) செ-க-ப அடிப்படை கொள்கை
இக்கொள்கைகளை பயன்படுத்தி முக்கோணங்களின் சர்வசமத் தன்மையை ஆய்ந்தறியலாம்.
Comments
Post a Comment