வடிவியல் - முக்காேணத்தின் வகைகள்

                   
                             வடிவியல்
             
             முக்ணேத்தின் வகைகள்



          மாபெரும் கிரேக்க கணிதமேதை யூக்ளிட் வடிவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.வடிவியல் பற்றிய பல்வேறு தகவல்களை திரட்டி யூக்ளிட் எலமன்ட்ஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.இப்புத்தகத்தில் முக்காேணங்களின் வகைப்பாடும் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியாகும்.

        முக்காேணமானது அதன் பக்கங்கள்  மற்றும் காேணங்களைப் பாெறுத்து ஆறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பக்கங்களை பாெறுத்து:

1)சமபக்க முக்காேணம்
        முக்கோணத்தின் மூன்று            பக்கங்களும் சமம்.


2)இரு சமபக்க முக்காேணம்
        முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்கங்கள் மட்டும் சமம்.

                 

3)அசமபக்க முக்காேணம்
         முக்கோணத்தின் அனைத்து பக்கங்களும் வெவ்வேறானவை.

              

காேணங்களைப்  பாெறுத்து:

1)குறுங்காேண முக்காேணம்
          மூன்று கோணங்களும் குறுங்கோணங்கள். அதாவது <90°.


2)செங்காேண முக்காேணம்
          ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம்.அதாவது =90°.


3)விரிகோண முக்கோணம்
       ஏதேனும் ஒரு கோணம் விரிகோணம் அதாவது > 90°.


        இவ்வாறு முக்கோணங்களை வகைப்படுத்துவதன் மூலம் அவற்றை எளிதில் அடையாளம் காண்பதோடு  அவற்றின் பண்புகளையும் நன்கு அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்புகள்

சாய்சதுரம் அமைத்தல்

அரை வட்டம்